Wednesday 21 September 2011

அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி . . .


காதல் மலர்கள்
நித்தி​ரை ​கொண்டிருக்கும்
நீர் பூத்த
இனி​மை நி​னைவுகள் . . .
பு​கை கவரி ​கொண்டு வருடுகி​றேன்.
தஞ்சம​டையும்
ஓவ்​வொரு வினாடியும்
அந்த பசு​மை நி​னைவுகள்
​வெளிப்பாடு.
               
பு​கையரும்புகள்
சுருள் ​கேசங்களாய்
பிரசவித்தது
பிரிவின் பிரளயத்​தை !
தரிசிக்கும்
ஓவ்​வொரு மு​றையும்
நி​னைவுகள் மட்டும்
எச்சமாய் ​தேங்கின.
தோ​கைகளின் வருடல்கள்
சமப்படுத்திய சுவடுகள் . . .
தேக​மெங்கும்
விரவிக் கிடக்கும்​
பைங்கிளிப் பார்​வைகள்.
​தோழியாய்
​தோள் ​கொடுத்து
து​ணையானாய் !..
காந்தள் ​மென்விரல்கள்
மீட்டிய இதய வீ​​ணை​
​சுருதி ​சேர்க்க
​சென்றதால்
இ​சைத்த ​சோக கீதம்.​

உருகும்
​வெண்​மைக் ​கோலம்
​வெள்​ளைப் புரவி​யென
இள​மைக் கனவுக​ள்
உயிர்ப்பித்த நாட்க​ளை
நி​னைவூட்டுகின்றன . . .

மலர்த் ​தோட்டம்
மலர்ந்தும் மலராத
அரும்புகள்
பனித்துளியின் சிலிர்ப்பு
பு​கை கவரி ​கொண்டு
நி​னைவுக​ளை வருடுகி​றேன்.
கனல்களாய் . . .
கண்ணீர்த் துளிகள்
நி​னைவூட்டும் அந்த அழகு
காயப்பட்ட மனது
அல்லி இதழால் அவளுக்கு இ​சைத்திடடி..

                                          மு. ஆ. பீர்ஓலி.
                                             18.09.2011

No comments:

Post a Comment