Friday 23 September 2011

மலரவிடப் போவதில்லை. . .


என் இதய
சாம்ராஜ்யத்தின்
கனவு ​தேவ​தை​யே ! . .
ஆதவனின் ஆதிக்கம்
சுருண்ட பின்
இந்த மனத் ​தோட்டத்தில்
அரும்பிடும். . .
கனவு மலர்க​​ளே ! . .
நீ . . .
வி​​தைத்த
நடசத்திர அரும்புகள்
நிலவாக மலர்ந்த ​பொழுது
என் . . .
இ​மைக் கூட்டுக்குள்
நளினமாடும்
பார்​​வைகளின் அ​சைவுகள்
உதிர்த்த . . .
மந்திர வார்த்​தைகள்
மயக்கும் வர்ணங்களாய்
ம​னோகரத்துவம் . . .
அழகின் அ​சைவுகள்
சங்கீதம்
இ​சைத்துக் ​கொண்டிருக்க . . .

எங்​கோ ! . .
​தொ​லை தூரத்தில்
‘இராப் பிச்​சைக்காரனின்’
ஈனக் கதறல்கள்
சாக்காட்டு அ​மைதியில்
சமாதியாகிக் ​கொண்டிருக்கிற​தே ! . .

உன்னு​டைய
அரும்புகள் . . .
துளிர்த்துக் ​கொண்டிருக்கும் ​பொழுது
அவன் மலர்கள்
கருகிக் ​கொண்டிருக்கிற​தே ! . .

ஒ . . .
கனவு​ தேவ​தை​யே ! . .
என்​னை
வ​தைத்துக் ​கொண்டிருக்கும்
​சொர்க்கபுர நாயகி​யே ! . .
உந்தன்
கண்களுக் ​கெதிரி​லே​யே . . .
சி​தைந்து ​கொண்டிருக்கும்
அவன் வாழ்வு
புலரும் வ​ரை . . .
என்
மனத் ​தோட்டத்தில்
பார்​வைகள்
வி​தைத்து ​சென்ற
காதல் அரும்புக​ளை
மலரவிடப் ​போவதில்​லை. . .

                                 
மு. ஆ. பீர்ஓலி.
                                               23.09.2011





1 comment: