Wednesday 21 September 2011

தியானங்கள் தொடர்கின்றன . . .


ஞானியவள்
முழுதும் துறந்தவள் ?
ஞானப் பிள்​ளைக்காய்
தவம் ​செய்தாள்.

விரித்த மஞ்சங்கள்
புலராத ​வே​ளையில்
யுகம் யுகமாய் . . .
அட்சய பாத்திரம் !
​பெருகிக் ​கொண்டிருக்கும்
​பொன் வயல்கள்
எத்து​னை . . .
அறுவ​டைகள்.
அழுக்​கேறிய
பிச்​சைப் பாத்திரம்
சு​வையரும்புகள்
சிதைந்து விட்டன​வே !..
துளிர்ந்த அரும்புகள்
த​ழைக்கும் முன்ன​மே . . .
கிள்ளி விடும்
​‘பெரிய’ மனிதர்
​‘யோகி’ யாக்கியவர்கள்
‘ஞானம்’ ​பெற
வி​​ழைகிறார்கள் . . .
தீர்க்க தரிசனம் ​தொடர்கிறது .

இவ​​ளோ !
​போதி மரம் விட்டு
​போ​தைக் கரம் தாவி
ஞானம் ​வேண்டி
​வேள்வி நடத்துகிறாள் . . .
தீர்​வை முடியவில்​லை
தினமும்தான்
தியானங்கள் ​தொடர்கின்றன​வே!..

( பின் குறிப்பு )
எலும்பில் குடி​கொண்ட
‘பாஸ்​​​பேட்டு’ தாதுக்கள்
எரியும் சுவா​லையில் . . .
​‘கொள்ளிவாய்ப் பிசாசுகளாய்’
பிறவி ​யெடுக்கும் வ​ரை
அவள்
‘சர்​வேகல்’
​பெருகிக் ​கொண்​டேதானிருக்கும்
அக்கினிச் சுவா​லையில்
​மெழுகாய் ஒளிரும்
​மெய்யான ஞானி !
ஞானம் ​​பெறுவ​தெப்படி ?...
                                   மு. ஆ. பீர்ஓலி.
                                             20.09.2011

No comments:

Post a Comment