Wednesday 25 January 2012

. வானவில்


ம​ழை ​​பெய்து ஓய்ந்த
மந்தார ​வே​ளை.
கீழ் வானில்
பூக்கும் வானவில்
என்னவளின்
கருவிழிக் குவ​லையில்
பிரசவிக்கும் முத்து
கன்னங்களில் –
பரிணமிக்​கையில்
​வெளிப்படும் சுரங்கள்.
உன்​னை-
தரிசிக்கும்
ஒவ்​​வொரு மு​றையும்
சிலிர்த்துப் ​போகி​றேன்.
மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                25 th Jan 2012 
                                          

Friday 20 January 2012

. காலம் கடந்த தீர்ப்பு




சி​தைக்குத் தீ மூட்டிய
​வெட்டியான்
எரிந்து ​சொறியும்
சாம்பல் திவ​லைக​ளை
பார்த்து ​பெருமித்திருந்தான்.
சி​தைக்குள்-
வியாபித்திருந்த ​கெட்ட​வைக​ளை
​பொசுக்கி விட்ட நிம்மதியில்.


மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                                              20 th JAN 2012

தாலாட்டு




தொட்டிலினில்
அழுது ​கொண்டிருந்த குழந்​தை
அந்த பிச்​சைக்காரியின்
தாலாட்டில்-
உறங்கிப் ​போனது.

விறகுடனும் அடுப்புடனும்
யுத்தம் ​செய்து
பு​கையில் உறங்கிப் ​போனாள்
இந்த தாய்
உ​லை ​கொதிப்பதற்காக.


மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                                              20 th JAN 2012

ஓரு மனதின் ​தேடல்கள்





ஓளியற்ற
ஒற்​றையடிப்பா​தை
சுற்றிலும் நிசப்தம்
தனித்து நிற்கும் ப​னை மரம்.
தன்னந் தனியனாய்
தன் சிறகுகளின் ஒளியில்-
கி​ளைக​ளைத் ​தேடித் ​தேடி. . .
இன்னமும்-
​தேடிக்​கொண்டிருக்கிறது
​பெயர் ​தெரியா பற​வை.
                                    
                                     
மு. ஆ. பீர்ஓலி.  எம்.ஏ., பி.எல்.,
                                                                                         20 th JAN 2012