Tuesday 27 September 2011

திக்கற்ற பாதையில். . .


கவி​தை​யே !..
ஒரு மரணத்தின்
நிஜத்​தை கண்டும்
கலங்க வில்​லை​யே. . .

இந்த பிரபஞ்சம்
​தொ​லைந்த. . .
​தேடல்கள்
வடுக்களாய் ஏமாற்றங்கள்.
​பொய் முகங்கள்
சமாதியான நிஜங்கள்
சி​தைந்து​ போன
உண்​மைகள் . . .
​மென் உணர்வுகள்.

​​
தோழி​யே ! . .
மரணம்
ஒரு நீள் துயி​லென
​நேசித்த​னை​யோ ! . .
அந்த கரங்களின்
மிருதுவான அ​னைப்பில்
சுகம் கண்டு.

முன் பனிக்காலம்
புல் ​வெளி
துயில் ​கொண்டிருந்த
பனித் திவ​லைகள்
​செங்கதிர்ப் பட்டு
சுவர்க்க பிர​வேசம்.

மா​னே !
உயிர்த்​ தெழு
அத்து​னை கல்ல​றைக​ளையும்
தகர்த்து விடு. . .
சுவடுகளின்றி.

நில​வே !
உன்​னை ம​றைத்திருப்பது
​மேகக் கூட்டங்கள்தான்
ம​லையல்ல. . .
மனதிற்குள்
பு​தைந்த​வை அ​னைத்தும்
​நெருஞ்சி முட்கள்தான்.
அ​னைத்​தையும்
க​ரைத்து விடு. . .
பனித் துளிகளாய்.

நிஜத்தின்
தரிசணங்க​ளை
​தேடி… ​தேடி…
​சொப்பணங்க​ளை மட்டு​மே
சுவாசித்து. . .
மூர்ச்​சை !

படரத் துடிக்கும்
இளந்தளிர். . .
அன்பின் அழுத்தங்கள்
சுவாசங்கள்
​தேடல்களாய். . .
மீண்டும் ஒரு பிரசவம்.

                               
                                      மு. ஆ. பீர்ஓலி. 
                     27.09.2011


No comments:

Post a Comment