Saturday 29 October 2011

முரண்பாடுகள். . .


வசந்த காலம்
மலர்கள்
பூத்துக் குலுங்கின. . .
பார்​வைகள்
பயணித்த தூரங்களில்.
வர்ணங்கள்
விழி மலர்களில் சிரித்தன.
இளந் ​தென்றலில்
வியாபித்து பரவிய
சுகந்தம்
மனதுக்குள்
சில்​லென்ற ​மென்​மை.

மல​ரே !..
உன் அழகு
​மென்​மையான
அந்த நளினம்?..
​தென்றலில் இ​​ழைந்து
இனி​மையாய். . .
விழி மலர்களில் ​தேங்கி
பரிணாம ​சேர்க்​கை.
ஆராத​னை ​செய்து
ஆர்ப்பரித்​தேன்.

நிஜத்​தை
அதன் உண்​மை​யை
​நேசித்து. . .
உன்னில் ​தொ​லைந்து ​போ​னேன்.
முரண்பாடுகள்
​நெரிஞ்சிலாய்த் ​தைத்தது.

நிற ​வேறுபாடுகள்
மலர்களின் தனித்துவம்.
மல​ரே !
நீ. . . ஏன் மாறினாய் ?...
உனக்குள்
எத்து​னை
வர்ண மாற்றங்கள் ! . .
மாயத் ​தோற்றம்
​​நெருடல்கள். . .
நிறமாறிக்​ கொண்டிருக்கிறாய்
நித்தம். . . நித்தம்.


                      மு. ஆ. பீர்ஓலி.
                          28.10.2011





No comments:

Post a Comment