Friday 7 October 2011

எங்கு சென்றிட்டாய் ? . .


கரு​மேகக் கூட்டங்கள்
உன் மதி முகத்​தை
சூழ்ந்து . . .
சி​றை ​செய்தாற்​போல்
​என் இ​மைக் கரங்கள்
கரு விழி​யை
கண்ணி​வைத்துப் பிடிப்பதற்கு
அப்பப்பா. . .

கயல்கள் இரண்டும்
விழித் தூண்டில்களில்
அகப்படாமல்
​மேவிடும் அ​லையாய்
இ​மைக் ​கோட்​டையில்
இன்ப ஊற்றுக்களில்
கிளித்தட்டு ஆடுகின்றன.

கனியிதழ் பிழியும்
மதுரச ​தேக்கத்தில்
மதி மயங்கி. . .
மயங்கி. . .
உன்னில்
எ​னையிழந்து
என்னில் உ​னைத்​தேடி !. . .

மதுரவாய் மலர்ந்து
மகரயாழ் ​மொழி ​பேசி. . .
காதல் மலர்கள்
கனவுக் ​கோட்​டையில்
நித்தில கீதமாய். . .
நீங்கா நி​னைவு.

கனியில் ​தேன் கலந்து
கரும்பில் பால் ​சேர்த்து
இனி​மை ​மொழியினளாய்
தனி​மையில்
துதிபாடும் தூயவ​ளே ! . .
என்னரு​கே
நீயிருந்தால்,

​தென்றலாய்
வந்து. . .
மனத் ​தேக்கத்தில்
சலசலக்கும். . .
நீர​லைகள்
காவியமாய்
எழில் கூந்தல்
குடி​கொள்ளும்
மனிமா​லை ​தொடுத்திடும்.

தேன் சு​வையும்
பாலும்
நல் அமுதும்
​தெவிட்டுதம்மா. . .
விழிக் கருவூலங்கள்
உதிர்க்கும் தத்துவங்கள்
உணரவில்​லை
உணர்த்தா​யோ ! . .

தத்துவப் ​பே​ழை
தவழ்ந்து வரும் தார​கை ! . .
பிள்​ளை ​மொழிக் ​கேட்க
​கொள்​ளை ஆ​சைதான்
இல்​லை​ யென்பா​யோ ?
இனியவ​ளே ! . .

இதயத்து ​சோ​லையில்
உதயத்தின் சீதனமாய்
பனிப் பூ பஞ்ச​ணை​யில்
படரும் ​செண்பக​மே ! . .

உன்-
இ​மைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
க​டைக் கண்ணால்
நாண. . .
ந​கை யுதிர்க்கின்றாய்

நிலவாக குளிர்ந்​தேன்
​தென்றலாய் வந்தாய் !
பகலாய் காய்ந்​தேன்
உன்​னைப் பிரிந்து.

துள்ளும் மான்
துடிக்கும் மீன்
தழுவும் ​தென்றல்
த​ழைக்கும் பூங்​கொடி.

எங்கு ​சென்றிட்டாய் ? . .
எந்தன். . .
இதய தார​கை நீ
என்னுள்​ளே. . .
குடியிருப்பாய்
என்​னை ​கொள்​ளையிட்டு,

                     மு. ஆ. பீர்ஒலி
                          05.10.2011





No comments:

Post a Comment