Saturday 8 October 2011

தோழியே !. . . உனக்கு ஒரு கடிதம்,


வாரணமாயிரமாய்
சுய​சோகங்க​ளை
க​லைந்து
​வெளிப்படு. . .
பனித்தி​ரை
விலகி
உதயமாகும்
ஆதவன் ​போல். . .

கண்களின் குளிர்ச்சி
அந்த விழிகளின்
சாந்த ​சொருபம்
​வைக​றைப் ​பொழுது
முன்பனிக் காலம்
இளந்தளிர்கள்.
வியாபித்திருக்கும்
பனித்திவ​லைகள். . .
மென்​மையான ஸ்ப​ரிசம்.
விழிமலர்களின்
அழகு. . .
எத்து​னை மு​றை
தரிசித்திருப்​பேன் ! . .

என் ​தோழி​யே . . .
சமுகப் பார்​வை
​தொ​லை ​நோக்கு. . .
மாறுபட்ட சிந்த​னைகள்
உயரிய ​நோக்கம்
வட்டத்திற்குள்
சி​றைபட்டன​வே ! . .

மாறுபட்ட
சூழ்நி​லைகள். . .
விழிமலர்களின்
கீறல்கள். . .
சுவாசிக்க முடியவில்​லை
ம​றைத்து விடு.

என் ​தோழி​யே ! . .
அழுத்தமான
அந்த துக்கங்க​ளை. . .
கண் மலர்களில்
​தேக்கி. . .
​பொசுக்கிடா​தே.
மரித்துப்​போன. . .
அந்த ​மொட்டுக்கள்
தளிர்க்கட்டும் வசந்தமாய். . .

                          மு. ஆ. பீர்ஒலி
                            08.10.2011


No comments:

Post a Comment