Wednesday 7 December 2011

காகிதப் பூக்கள்


வின்​வெளியில்
​மேகங்களின் ஊர்வலம். . .
நட்சத்திரங்களின் வழிகாட்டல்.
இள​மையின் உச்சத்தில்
நளினமாய்
என்னருகில்-
இவள் அமர்ந்திருந்தாள்.

இளந்​தென்றல்
வாசிப்பில்-
அவள் கருங்கூந்தல்
இ​ழைந்து ​நெளிந்தது.
​வெண் ​மேகங்கள்
நளினமாய். . .
ஊர்ந்து ​கொண்டிருந்தன.

வ​டைக் காற்று-
பிரசவித்தது.
​மேகங்கள் முகம் கறுத்து
ஆர்ப்பரித்தன.
எனக்கருகாமையில். . .
இவள்-
கண்கள் சிவந்திருந்தாள்.

எதிரில்-
இ​லை​யைத்​ தொ​லைத்த
ஒற்​றை மரம்.
தன் சிறகுகள்
படபடக்க. . .
தஞ்சம​டைந்த சிறு பற​வை.

இவள் இ​மைகள்
படபடத்தன.
முத்​தொன்று. . .
கண்ணங்களில் உருண்டது.
அருகா​மையில்
​பெருகிய. . .
​மேக கண்ணீர்த் துளிகள்
சிற்​றோ​டையாய்-
​நெளிந்தது.

அவள் மனதின்
நிர்வாணத்​தை ​நேசித்து. . .
என்​னை இழந்​தேன்.
நீலப் பட்டு ​மெத்​தை-
நிலவு
களங்கமின்றி ​வெளிப்பட்டது.
அந்த பிரகாசம்
குளிர்வித்தது.

அன்பின் முழு​மை​யையும்
அருவியாய். . .
​பொழிந்து ​கொட்டினாள்
முதன் மு​றையாய்
சிலிர்த்துப் ​போ​னேன்.
இவள்-
என் உயி​ரென
மனது படபடத்தது.

அந்த சிறு பற​வை
சிற்​றோ​டை
​மேகப் பயணம்
பிரசவித்த-
நிலவு
அ​னைத்தும்
க​லைந்து ​போயின.
திரும்பிப் பார்த்த ​பொழுது
இவள்-
​தொ​லைந்து ​போயிருந்தாள்,
மனது வலித்தது,

                          மு. ஆ. பீர்ஓலி.
                                26.11.2011.  




No comments:

Post a Comment