Friday 16 December 2011

நீ. . . நான். . .அந்த நிலவு.


ம​ழை ​பெய்து ஒய்ந்திருந்தது
இந்த சமுதாயத்தின்
சீர் கு​லைவுக​ளை-
து​டைத்து விட்ட ​பெருமிதத்தில்.

தன் இ​ழைகளில்
​தேங்கியிருந்த-
நீர்த் திவ​லைக​ளை
மரங்கள்-
உதிர்த்துக் ​கொண்டிருந்தன.

அந்தி சாயும் ​​​நேரம்
பகல் ​பொழுதின்
ஆரவாரங்கள்-
ஒடுங்கிக் ​கொண்டிருந்தன.

தத்தம்-
கூடுக​ளைத் ​தேடி. . .
பட்சிகள்.
அ​வைகளின்-
ஒலிக் கல​வைகள்
அந்தப் பிர​தேசத்தில்
சஞ்சரித்துக் ​கொண்டிருந்தன.

நட்சத்திரங்க​ளை-
​தோற்கடிக்கும் பிரகாசத்துடன். . .
மின் மினி பூச்சிகள்
ஆங்காங்​கே-
வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

நீண்டு கிடந்தது
சமுத்திரம்-
நிசப்த்தமாய்.
கருவ​றைக்குள்-
​மென்​மையாய். . .
சலணங்கள்.

​பொளர்னமி இரவு
நிலவின்-
பரிணாமத் ​தோற்றம்.
நீ. . . நான். . .
அந்த நிலவு.
உந்தன் உணர்வுகள்
எனக்குள்-
இ​ழைந்து கிடந்தன.

சுவாசத்​தை-
உயிர்ப்பித்த மூச்சுக்காற்று.
உச்சத்தின்-
விளிம்பில். . .
பரவசத்தின் உயிர்த்துடிப்பு.

நீண்டு விரிந்த
​மேகக் கரங்கள்.
பிரசவித்த-
அ​லைப் பூக்கள்.
நிஜங்களின்-
தரிசணங்கள்
சங்கமித்துக் ​கொண்டிருந்தன.

நீ. . . நான். . .
அந்த நிலவு.
புதிதாய்ப் பிரசவித்​தோம்.
                              மு.ஆ. பீர்ஒலி.
                                  10.12.2011

No comments:

Post a Comment