Friday 16 December 2011

நித்திரை விழிகள்


மங்கிய-
​தெரு விளக்கில்
சிதறிய நாணயங்க​ளை
பார்த்துப் பார்த்து. . .
அவன்-
​சோர் வ​டைந்திருந்தான்.

விழிகளில்-
காதல் மட்டு​மே
வியாபித்திருக்க. . .
பக்கத்தில்-
அவன் ம​னைவி.



மடியில்-
வற்றிய மார்பகங்க​ளை
ஏகத்துடன்-
​வெறித்து ​நோக்கிய
இவள் குழந்​தை.

அருகில்-
சிறு குருவிகளின்
இன்னி​சை கீதங்கள். . .
சன்னமாய்.
அன்னாந்து பார்த்தாள்.

கூட்டிற்கு திரும்பிய
தாய்ப் பற​வை-
நளினமய் இ​றையூட்ட
சந்​தோசத்தில்-
சிறகடிக்கும். . .
சிறு குருவிகள்.

ஸ்பரிசம் பட்டு-
திரும்பினாள்.
விளக்கு அ​ணைந்து-
சுற்றிலும்
இருள் சூழ்ந்தது.

இ​ரைச்சலுடன்-
​பேருந் ​தொன்று
தண்ணீ​ரை சிதறிச் ​சென்றது.
அந்த ​வெளிச்சத்தில்-
சிரித்த நாணயங்கள்
இவள் ​கையில்.
விழிகள் ​கேட்டன
பாலுக்குத் ​தேறுமா! . .
                                 மு. ஆ. பீர்ஒலி.
                                       15.12.2011

No comments:

Post a Comment