THE VISION
Monday, 12 March 2012
மனித மனம்
கருவறை இருட்டு
கல்லறை நிசப்தம்
பிரகாசித்தவன்
இந்த பிரபஞ்ச ஒளியில்
இருண்டு கிடந்தான்.
m.a. peeroli
Wednesday, 25 January 2012
. வானவில்
மழை பெய்து ஓய்ந்த
மந்தார வேளை.
கீழ் வானில்
பூக்கும் வானவில்
என்னவளின்
கருவிழிக் குவலையில்
பிரசவிக்கும் முத்து
கன்னங்களில் –
பரிணமிக்கையில்
வெளிப்படும் சுரங்கள்.
உன்னை-
தரிசிக்கும்
ஒவ்வொரு முறையும்
சிலிர்த்துப் போகிறேன்.
மு. ஆ. பீர்ஓலி
.
எம்.ஏ., பி.எல்.,
25 th Jan 2012
Friday, 20 January 2012
. காலம் கடந்த தீர்ப்பு
சிதைக்குத் தீ மூட்டிய
வெட்டியான்
எரிந்து சொறியும்
சாம்பல் திவலைகளை
பார்த்து பெருமித்திருந்தான்.
சிதைக்குள்-
வியாபித்திருந்த கெட்டவைகளை
பொசுக்கி விட்ட நிம்மதியில்.
மு. ஆ. பீர்ஓலி
.
எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
தாலாட்டு
தொட்டிலினில்
அழுது கொண்டிருந்த குழந்தை
அந்த பிச்சைக்காரியின்
தாலாட்டில்-
உறங்கிப் போனது.
விறகுடனும் அடுப்புடனும்
யுத்தம் செய்து
புகையில் உறங்கிப் போனாள்
இந்த தாய்
உலை கொதிப்பதற்காக.
மு. ஆ. பீர்ஓலி
.
எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
ஓரு மனதின் தேடல்கள்
ஓளியற்ற
ஒற்றையடிப்பாதை
சுற்றிலும் நிசப்தம்
தனித்து நிற்கும் பனை மரம்.
தன்னந் தனியனாய்
தன் சிறகுகளின் ஒளியில்-
கிளைகளைத் தேடித் தேடி. . .
இன்னமும்-
தேடிக்கொண்டிருக்கிறது
பெயர் தெரியா பறவை.
மு. ஆ. பீர்ஓலி
.
எம்.ஏ., பி.எல்.,
20 th JAN 2012
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)