Wednesday, 21 September 2011

உண்மையை தேடி


தேடல்கள்
விடிய​லை எதிர்​ நோக்கி !
​தொ​லை தூரத்தில்
சிறு பற​வையின் தவம்.
புரியாத நிகழ்வுகள் . . .
உண்​மை​யைத்​தேடி
மீண்டும்
அந்த பயணம்.

நீல நிற சமுத்திரம்
விளிம்பில்
மிருதுவான ​மெத்​தை
ஈரகசிவு
மனதிற்குள் சிலிர்ப்பு.
உயரத்தில்
​மெல்லிய கீறலாய் . . .
தூரி​கையின் வர்ண ​கோலம்.
இயற்​கை வ​ரைந்த
அந்த ஓவியம்
இ​மைகளுக்குள்
சங்கமித்துக் ​கொண்டிருந்தது . . .
முடி திறந்த
விழிகள்
நிறமாறிக் ​​கொண்டிருக்கும்
இந்த பிரபஞ்சம்
படர்ந்து விரிந்தது.
உணர்வுகள் விழித்துக் ​கொண்டது !

விம்மல்கள் மட்டும்
​பெருகிக்​ ​கொண்டிருந்தன . . .
இருண்டு கிடந்தது சமுத்திரம்
​பொய்முகங்களின் தரிசனம்
தி​ரையிட்டது.
​வெப்பத்​தை கக்கிய
நிலவு
மனது கனத்தது . . .
மீண்டும் அந்த பயணம்
உண்​மை​யைத்​தேடி.
                                           மு. ஆ. பீர்ஓலி.
                                             17.09.2011

No comments:

Post a Comment