Monday, 12 March 2012

காதல்


விழிகள் ​கைக்​ கோர்த்து
மனத்​ ​தோட்டத்தில் உலா
துளி​ர்த்த அரும்புகள்-
மலரத் ​தொடங்கின.
                        m.a. peeroli

விடையெழுதா வினா. . .


பழனிச்சாமி
தன் ​பெண்சாதியிடம் ​கேட்டது
எப்​பொழுது-
இந்த சாதி மத சண்​டை ஒழியும்
அவள் ​​​மவுனமாய்ப் புன்ன​கைத்தாள்
                                         m.a. peeroli

திசை தெரியா பறவை


தஞ்ச​​மென்​று வந்தவ​ளை
பஞ்ச​னையில் புடம் ​போடும்
பாவ மயப் ​பொய்​கையில்
மான சிறு குருவி
மல்லாந்து மிதக்கிறது.
                           m.a. peeroli

விடியலை நோக்கி. . .


கழிவு நீ​ரோ​டை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
​வேர்த்திருந்தான்.
குப்​பைத்​தொட்டி
இ​றை ​தேடி-
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்.
இ​டையில்
​பொறுக்கிய இ​லைக​ளை-
ஆய்ந்து ​கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி த​டைப்பட்டது.
தெரு மு​னையில்
ஒரு பிச்​சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப் பசி ​போக்க
யாரு​டைய பசிக்​கோ-
இ​ரையாகிக்​ கொண்டிருந்தாள்.
இது சுதந்திர நாடு
விடிய​லை ​நோக்கி. . .
                          m.a. peeroli

எதிர்பார்ப்பு


வட்டம்
புள்ளிகள்
சதுரம்
​கோடுகள்
பூமி அதன் அச்சில்
சுழன்று ​கொண்​டேயிருக்கிறது.

வட்டத்திற்குள் சதுரம்
புள்ளிகள் ​கோடுகளாய்.
கதிரவன் வரவிற்காய் தாம​ரை.
நில​வை எதிர்​நோக்கி அல்லி.
ஒன்றினுள் ஒன்றாய்
ஒன்றுடன் ஒன்றாய்
பிரி​தொன்​றை எதிர்ப் பார்த்து
மற்​​​றொன்றாய். . .
பிரபஞ்சம்
சுழன்று ​கொண்​டே தானிருக்கிறது.
                                      m.a. peeroli