THE VISION
Monday, 12 March 2012
கனவே உன்னைத்தான் நேசிக்கிறேன்
கனவு
உயிர் ஓவியமாய்
பிரசவித்தாள்.
நினைவு
காகிதப் பூவாய்
உதிர்ந்து போனாள்.
m.a. peeroli
நிசப்தம்
அவள்-
எழுதிய காவியத்தை
காற்றில் கரைத்து விட்டாள்.
அவனுக்குத்தான் வலித்தது.
இவள்-
விழிகள் அருளிய
கவிதைத் தொகுப்பு
கானல் நீரில் கரைந்து போனது
இவனுக்கு மட்டுமே வேதனை.
m.a. peeroli
காதல்
விழிகள் கைக் கோர்த்து
மனத் தோட்டத்தில் உலா
துளிர்த்த அரும்புகள்-
மலரத் தொடங்கின.
m.a. peeroli
விடையெழுதா வினா. . .
பழனிச்சாமி
தன் பெண்சாதியிடம் கேட்டது
எப்பொழுது-
இந்த சாதி மத சண்டை ஒழியும்
அவள் மவுனமாய்ப் புன்னகைத்தாள்
m.a. peeroli
திசை தெரியா பறவை
தஞ்சமென்று வந்தவளை
பஞ்சனையில் புடம் போடும்
பாவ மயப் பொய்கையில்
மான சிறு குருவி
மல்லாந்து மிதக்கிறது.
m.a. peeroli
விடியலை நோக்கி. . .
கழிவு நீரோடை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
வேர்த்திருந்தான்.
குப்பைத்தொட்டி
இறை தேடி-
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்.
இடையில்
பொறுக்கிய இலைகளை-
ஆய்ந்து கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி தடைப்பட்டது.
தெரு முனையில்
ஒரு பிச்சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப் பசி போக்க
யாருடைய பசிக்கோ-
இரையாகிக் கொண்டிருந்தாள்.
இது சுதந்திர நாடு
விடியலை நோக்கி. . .
m.a. peeroli
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)